சுசீந்திரம், ஜுலை 4 –
பறக்கை மது சூதனப்பெருமாள் கோவில் பழமையான கோவில்களில் ஒன்று இந்த கோவில் கற்களால் அமைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழமையான திருக்கோவில்களில் ஒன்று இந்த கோவிலில் ஆங்காங்கு சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டது. எனவே இந்த கோவிலை புனரமைத்து தர வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் கோவிலை புனரமைப்பதற்காக அரசு ஒரு கோடியே 37 லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ரூபாயில் கருங்கல் தளம் பதித்தல், கருங்கல்லால் கட்டப்பட்ட சுவர்களை நீரினால் சுத்தம் செய்தல், சுவர்களில் ஏற்பட்ட விரிசல்களை சரி செய்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை குமரி மாவட்ட திருக்கோவில் மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரன் நாராயண குரு தலைமையில் பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கோவில் மராமத்து பணியாளர் ராஜ்குமார், கோவில் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.