பரமக்குடி, ஆக. 3 –
பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆயிர வைசிய சபை தலைவர் பாலுசாமி தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். கல்லூரி தலைவர் முருகானந்தம் வாழ்த்துரை வழங்கினார். பொறியாளர் ஜெகநாதன் மாணவிகளுக்கு பட்டங்களை பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார். துணை தலைவர் பிரகாசம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாக அலுவலர்கள் காயத்ரி, ஆனந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் முதல்வர் வெங்கடேசன் நன்றி கூறினார்.