தருமபுரி, செப்டம்பர் 04 –
தருமபுரி மாவட்டம் செட்டிகரை ஊராட்சி நீலாபுரம் கொட்டாய் மேடு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பொன் மாரியம்மன் மற்றும் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திங்கட்கிழமை 1/9/2025 மங்கல இசை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், காப்பு கட்டுதல் ஆகியவை தொடர்ந்து கொடியேற்றுதல் நடைபெற்றது. மாலை 5 மணி அளவில் மங்கல இசை, வாஸ்து சாந்தி, புற்று மண் எடுத்தல், தீபாரதனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை 2/9/2025 காலை 7 மணி அளவில் அஷ்டலட்சுமி ஹோமம், துர்கா, லட்சுமி சரஸ்வதி ஹோமம் நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. புதன்கிழமை 3/9/2025 காலை 11 மணி அளவில் பம்பை வாத்தியம் முழங்க தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.
மாலை 7 மணி அளவில் முதற்கால யாக பூஜை, மூல மந்திர ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. வியாழக்கிழமை 4/9/2025 காலை 7.30 மணி அளவில் மங்கள இசை, கோ பூஜை, தருண கணபதி பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, ஷன்னவதி திரவிய ஹோமம் நடைபெற்றது. காலை 10 மணி அளவில் ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ பொன் மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



