நித்திரவிளை, ஜூலை 22 –
நித்திரவிளை அருகே இரவிபுத்தன் துறையை சேர்ந்தவர் டேவிட் லியோன் (62). மீனவர். நேற்று முன்தின் 6 இரவு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வினு (30), விஜு ஆகியோர் வந்த பைக் டேவிட் லியோன் மீது மோதியது. இது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வினு மற்றும் பைக்கின் பின்னால் இருந்த விஜு ஆகிய இருவரும் சேர்ந்து டேவிட் லியோனை தாக்கியுள்ளனர். காயமடைந்த டேவிட் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நித்திரவிளை போலீசார் வினு மற்றும் விஜு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.