கோவை, ஆக. 14 –
சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற கோரி நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி ஆனைமலை சாலை திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உடுமலை சட்டமன்றத் தொகுதி மற்றும் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



