நாகர்கோவில், ஜூலை 2 –
நாகர்கோவில் வடசேரி வணிகர் தெருவை சேர்ந்தவர் அருண் மோகன் குமார் (55). ஆட்டோ டிரைவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவரது மனைவி சரோஜினி மற்றும் குடும்பத்தினர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று விட்டனர். வீட்டில் அருண் மோகன் குமார் மட்டும் இருந்து வந்தார்.
இந்நிலையில் கோயிலுக்கு சென்று விட்டு சரோஜினி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் அருண் மோகன் குமார் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருண் மோகன் குமாரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அருண் மோகன் குமார் இறந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


