நாகர்கோவில், செப். 22 –
நாயர் சேவா சமாஜம் நாகர்கோவில் கரயோகம் சார்பாக ஓணம் திருவிழா மற்றும் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நாகர்கோவில் தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கூட்டு குடும்ப உறவு குறைந்து கொண்டே வரும் இக்காலகட்டத்தில் குடும்ப உறவுகளின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக இவ்விழா அமைந்திருந்தது. இதில் 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகளும் நலிவடைந்தோர்க்கு உதவித்தொகையும் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது. விழாவை என் எஸ் நாகர்கோயில் கரயோகம் தலைவர் ராஜன் துவக்கி வைத்து தலைமை தாங்கினார்.
வரவேற்புரை ராதகிருஷ்ணன் கரயோக செயலாளர் செந்தில்குமார் ஆண்டு அறிக்கை வாசித்தார். வரவு செலவு கணக்கு அஜித்குமார் தாக்கல் செய்தார். சிறப்பு விருந்தினர் sree லதா ஆனந்த் ஆயூர்வேதா மருத்துவக்கல்லூரி பேராசிரியர் கன்னியாகுமரி மாவட்ட நாயர் கரயோக தலைவர் மதுசூதனன் நாயர் நன்றியுரை சாதசிவன் நாயர் மற்றும் வழக்கறிஞர் ஸ்ரீ குமரன் நாயர் முன்னால் மாவட்ட தலைவர் என். எஸ். வி. தம்பி ஆகியோர் தலைமையில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் கேரளா பாரம்பரிய நடனமான திருவாதிரை களியை பாரம்பரிய உடை உடுத்தி பெண்கள் நடனமாடி காட்சிப்படுத்தினர். விழாவானது ஓண சத்யா எனும் மதிய உணவோடு நிறைவு பெற்றது.



