நாகர்கோவில், அக்டோபர் 23 –
தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு:
பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் ரயில் எண் 12666 கன்னியாகுமரி – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 25ம் தேதி (நாளை மறுநாள்) காலை 5:50 மணிக்கு புறப்படுவது விருதுநகர் ஜங்ஷன், மானாமதுரை ஜங்ஷன், காரைக்குடி ஜங்ஷன் மற்றும் திருச்சி ஜங்ஷன் வழியாக செல்லும். மேலும் மதுரை ஜங்ஷன், கொடைக்கானல் ரோடு மற்றும் திண்டுக்கல் ஜங்ஷன் செல்லாது. கூடுதலாக அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஜங்ஷன் மற்றும் புதுக்கோட்டையில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது.



