நாகர்கோவில், செப். 04-
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நேற்று பாலின உளவியல் குறித்த கண்காணிப்புக் குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு கல்லூரி முதல்வர் முனைவர் மு. சுசீலாபாய் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் ஆனி சோஃபியா ரெக்ஸ்லின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாலின உளவியல் குறித்து மாணவிகளிடம் எடுத்து கூறினார். நிகழ்வின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரா. சுஜிதா குமாரி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியினை குழு உறுப்பினர் முனைவர் கார்மல் விஜிலா பாய், முனைவர் அஜி மற்றும் முனைவர் ஷாகுல் ஹமீது ஆகியோர் செய்திருந்தனர்.



