By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

Last updated: July 31, 2026 7:34 pm
July 31, 2026
1 View
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 31 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று 31ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது.
ஜுன் 2026-ம் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வாசிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வீட்டுத் தோட்டம் குறித்த வெற்றிக்கதை காணொளிக்காட்சி மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

பி.பி சானலில் தானியங்கி மறுகால் சீரமைத்திட எழுந்த கோரிக்கைக்கு, இப்பணிக்கென நிதி வேண்டி கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு பொறியாளர் வரும் வாரத்தில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் செயற்பொறியாளர் நீர்வளத்துறை தெரிவித்தார். தோட்டிகோடு புதுக்கடை சானல் 4-வது மடை சீரமைப்பு பணியினை இந்த ஆண்டிற்கான நீர்வளத்துறை சீரமைப்பு பணிகள் பட்டியலில் சேரத்து செயல்படுத்தவும், அனந்தனாறு சானலில் நீர் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பாலத்தை விரைந்து அகற்றிடவும் மாவட்ட ஆட்சியர் செயற்பொறியாளர் நீர்வளத்துறையை கேட்டுக்கொண்டார்.

நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக உலக்கை அருவி திட்டத்தை செயல்படுத்திட விவசாயி செண்பகசேகரபிள்ளை வைத்த கோரிக்கைக்கு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நான்குவழிச்சாலை மற்றும் ரயில்வே திட்ட பணிகளால் நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் குறித்த முன்னேற்ற அறிக்கை சமர்ப்பித்திட மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். சுசீந்திரம் மணக்குடியான் கால்வாய் தூர்வார வைத்த கோரிக்கைக்கு, வி.வி கிராமத் திட்டத்தின்கீழ் இதனை செயல்படுத்திட திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 99 பணிகளுக்கு பணி மேற்கொள்ள 4.44 கோடி நிதி பெறப்பட்டு 90 பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் மீதமுள்ள 9 பணிகளும் விரைந்து முடிக்கப்படும் எனவும் செயற்பொறியாளர் நீர்வளத்துறை தெரிவித்தார்.

புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிய கோரிக்கைக்கு, கூடுதலாக 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதால் நிலையங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மூலம் மரக்கன்றுகள், செடிகள், விவசாயிகளுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலுமணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ர.மோனிகா, வேளாண்மை இணை இயக்குநர் எம்.ஆர்.வாணி, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி மேற்கு தொகுதியில் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு
திருச்சி ஜி ஹெச்: எபோலா வைரஸ் புதிய வார்டு தொடக்கம்
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கூடை நிறைய ஐந்து ‌ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து டெபாசிட் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்
கோவையில் கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி
விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் காமராஜர் மண்டபத்தில் மதவெறிக்கு எதிரான உறுதிமொழி; அமைச்சர் பங்கேற்பு

November 7, 2025
57 Views
ஸ்ரீ தேவி குமாரி கல்லூரியில் விளையாட்டுப் போட்டி
முருகப்பெருமான் பட்டாபிஷேகம் திருக்கல்யாணம்
ராமன் குரூப்ஸ் குழுமத்தின் செட்டாக் எலக்ட்ரிக் ஷோரூம் திறப்பு விழா
கன்னியாகுமரி கடலில் நாட்டுப் படகில் இருந்து விழுந்த மீனவர்: தேடும் பணி தீவிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account