நாகர்கோவில், ஆக. 7 –
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து கோடி லிங்கம், குபேர லிங்கம், ஸ்வர்ண லிங்கம், அபிஷேக லிங்க தரிசனம் திறப்பு விழா மற்றும் ரக்ஷா பந்தன் தொடக்க விழா நடைபெற்றது.
நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி சகோதரத்துவத்தை உணர்த்தும் ராக்கி கட்டப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக ராஜ யோகினி பிரம்மா குமாரி பீனாஜி மற்றும்
நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, புதிய உலக நிறுவனத் தலைவர் டாக்டர் சஜீஷ் கிருஷ்ணா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.