By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோவாளை கால்வாய் உடைப்பு சம்பவம்; விவசாயிகளுக்கு இழப்பிடு வழங்க கோர்ட் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோவாளை கால்வாய் உடைப்பு சம்பவம்; விவசாயிகளுக்கு இழப்பிடு வழங்க கோர்ட் உத்தரவு
கனஂனியாகுமரி

தோவாளை கால்வாய் உடைப்பு சம்பவம்; விவசாயிகளுக்கு இழப்பிடு வழங்க கோர்ட் உத்தரவு

Last updated: September 24, 2025 6:56 pm
September 24, 2025
40 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 24 –

தோவாளை பாசன கால்வாயில் தூவச்சி என்ற இடத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட கசிவை சரி செய்வதாக காரணம் காட்டி அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து பாசனம் நடைபெறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் விவசாயிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்காமலும் தகவல் தெரிவிக்காமலும் சானலை உடைத்து அதிகாரிகளும் ஒப்பந்ததாரரும் வேலை செய்தனர். தண்ணீர் அடைப்பு காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வேலை செய்வதற்கு பதில் நாற்றுக்கள் நட்ட பிறகு வேலை ஆரம்பித்ததால் தோவாளை சேனலில் தண்ணீர் கிடைக்காமல் நெல் உட்பட அனைத்து விதமான பயர்களும் கருகின.

ஆகவே விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு விவசாயிகள் உட்பட பல தரப்பினரும் தொடர் போராட்டங்கள் நடத்தினர். அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறினர். அதிகாரிகள் நடத்திய பல்வேறு கூட்டங்களிலும் இழப்பீடு கேட்டு கோரிக்கை விடுத்தனர். பத்திரிகைகள் உட்பட அனைத்து மீடியாக்களிலும் பல முறை செய்திகள் வெளியாகின. ஆனாலும் எந்த பலனும் ஏற்படவில்லை.

ஆகவே, பாசனத்துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ ஏற்பாட்டின் பேரில் – தோவாளை சேனல் பகிர்மான குழு தலைவர் ஞான ஜேசு அந்தோணி தலைமையில் தோவாளை சேனல் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் ஜெனில் சிங், இளங்கோ, செல்வமணி, விஜயேந்திரன், சேகர் உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தவறு செய்த அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு வழக்கு தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணைக்கு வந்த போது விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவே கூடாது என்பதற்காகவும் – தவறு செய்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும் விவசாயிகளுக்கு எதிராக அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால் பாசனத்துறை நிர்வாகிகள் தரப்பில் , உரிய ஆதாரங்களுடன், தகவல் அறியும் சட்டத்தில் பெறப்பட்ட ஆவணங்களையும், பத்திரிகை செய்திகளையும், ஊடக ஆவணங்களையும் தாக்கல் செய்திருந்தனர்.

ஆகவே, விவசாயிகளினுடைய நிலைமையை கனிவோடு பரிசீலித்த உயர்நீதிமன்றம் 4 மாதத்திற்குள் சென்னை அரசு செயலர் இதனை விசாரணை செய்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அதிகாரிகளிடமிருந்து உரிய அறிக்கை பெற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சி.டி பெருமாள் ஆஜராகி வாதாடினார். அதிகாரிகளிடம் கிடைக்காத நியாயம் – மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் இதற்கு முயற்சி எடுத்த பாசனத்துறை நிர்வாகிகளை பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் சபரி மலை ஐயப்ப சீசன் தொடக்கம்
புதுக்கடை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை
குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்
6.65 கோடி மதிப்பில் மகளிர் தொழில் கூடம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம்

July 9, 2025
45 Views
திருச்சியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூதாட்டி கைது
அகஸ்தீஸ்வரத்தில் தொழிலாளி தற்கொலை
திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்.
கருங்கலில் ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account