ஈரோடு | செப். 26
ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் உள்ள VCET IT பார்க்கில், VCET IIF சார்பில் தொடக்கநிலை தொழில் வளர்ப்பு மையம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொடக்க நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கத் தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, தொழில் தொடங்குவதற்கான ஊக்குவிப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாணவர்களால் உருவாக்கப்பட்ட புத்தாக்கத் திட்டங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களை பார்வையிட்ட ராமச்சந்திரன், அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மாணவர்களுக்கு தேவையான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். மாணவர்களின் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
விழாவில் வேளாளர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், அறக்கட்டளை உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், யுவராஜா, கல்லூரி முதல்வர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



