திருப்பத்தூர்:மார்ச்:22, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கள் தின மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், நாட்றம்பள்ளி அடுத்த பைனப்பள்ளி கிராமத்தில் 70 க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கழிவு நீர் கால்வாய் பணியினை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறைக்கு இது சம்பந்தமாக ஆய்வினை மேற்கொண்டு விரைவில் விளக்கம் அளிப்பதோடு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கலா சண்முகம், ஒன்றிய துணை செயலாளர் திராவிடன் (எ) சண்முகம் மற்றும் ஊர் பொதுமக்கள் மனு அளிக்கப்பட்ட இந்நிலையில் , ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இராசேந்திரன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வினை மேற்கொண்டார் .
ஊராட்சி மன்ற தலைவர் இராமன், ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர் அகிலா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கலா சண்முகம் ஆகியோரின் தீவிர முயற்சியில் அப்பகுதியில் நிரந்தர கழிவு நீர் கால்வாய் பணி செயல்படுத்தப்பட்டு பொதுமக்களின் அடிப்படை வசதியினை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊர் பொதுமக்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணிகள் சம்மந்தமாக வருவாய் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



