தேனி, அக். 9 –
காந்தி ஜெயத்தி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 11.10.2025 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயத்தி தினத்தை முன்னிட்டு 11.10.2025 முற்பகல் 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் கிராம ஊராட்சியின் தனி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)-ஆல் நடத்தப்படவுள்ளது.
130 கிராம ஊராட்சிகளிலும் மிகச் சிறப்பாகவும், பொதுமக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையிலும், கிராம சபைக் கூட்டத்தை நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் 11.10.2025 சனிக்கிழமை அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.



