நாகர்கோவில், மே. 12-
தேசிய ரயில் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
குமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் திருச்சி இருப்பு பாதை காவல் மாவட்டம் மற்றும் நாகர்கோவில் இருப்பு பாதை காவல் நிலையம் சார்பாக போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. பேரணியில் போதை பொருளை தடுப்போம், மனித குலத்தை காப்போம் என்ற பாத கைகள் ஏந்தியவாறு பொதுமக்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நாட்டு புற கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியினை கோட்டாறு இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் அருள் ஜெயபால் இதற்கான ஏற்பாடுகளை ரயில் காவல்துறையினரோடு இணைந்து செய்திருந்தனர். உடன் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு கன்னியாகுமரி மாவட்ட ஆய்வாளர் கேத்தரின் சுஜாதா இருந்தார். சிறப்பு விருந்தினராக சமூக சேவகர், மருத்துவர் தி. கோ. நாகேந்திரன் கலந்துகொண்டார். இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களான மருத்துவர் ஹிப் நஜஜர், மரு. கவிதா, மரு.ரம்யா மேற்பார்வையாளர், ஜோனா மாநில கல்லூரி மாணவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சமூக சேவகர் மருத்துவர் நாகேந்திரன் கூறும்போது தேசிய ரயில் தினதில் ஒரு சிறப்பான போதை விழிப்புணர்வு நிகழ்வு நடத்தியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஆகும். போதை இல்லா உலகை கொண்டு வர ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் நம் பங்கிற்கு பிறர் ஒழுக்கத்தோடு வாழ வகை செய்ய வேண்டும். சிறு குழந்தைகள் மற்றும் வழிகாட்டுதல் அவசியப்படுகின்றவர்களிடம் தனி அக்கறையும் தனி கவனமும் செலுத்த வேண்டும் . தினம் தினம் நம் நேரங்களை சரியான வழியில் சரியானவர்களிடம் செலவிடுவது ( மரம் நடுதல், புத்தக வாசித்தல், விளையாடுதல் ,வீட்டு வேலைகளை கவனிப்பது, சமுதாயப் பணிகளை மேற்கொள்வது ) சிறப்பு இதை பெற்றோர்களும் பெரியவர்களும் கவனிக்க கடமைப்பட்டவர்கள். மாறுதலான சூழ்நிலைகள் ஏற்படுகின்ற போது அருகாமையில் உள்ள காவல் நிலையத்திலோ சமூக சேவகளிடமோ தெரிவிப்பது கடமையாகும். என அவர் கூறினார். அதனைைை தொடர்ந்து அனைவரும் இணைந்து மனிதநேயத்தையும், போதை இல்லா உலகத்தை பாதுகாக்க, உலக ஒற்றுமையை பாதுகாக்க கற்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தலைமை காவலர் ராணி விழாவை தொகுத்து வழங்கினார். போதை விழிப்புணர்வு நோட்டீஸ் ரயில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்டது. விழிப்புணர்வு பேரணி ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி மறுபடியும் ரயில் நிலையத்திலேயே வந்து நிறைவு பெற்றது. இவ்வாறாக நடைபெற்ற நிகழ்வு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. காவல்துறை துணை ஆய்வாளர் மகிலன் நன்றி உரையாற்றினார்.



