கோவை, ஆகஸ்ட் 26 –
கோவை மாவட்டம் காரமடை ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி அரங்கில் தெலுங்கர் முன்னேற்றக் கழக கோவை மண்டல மாநாடு கழக நிறுவனர் ரா. பாலாஜி சிறப்புரையில் நிறுவன கழகத் துணை பொதுச் செயலாளர் ஜெய் கணேஷ் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் கே. கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. துவக்க நிகழ்ச்சியாக கலை நிகழ்ச்சிகள் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.
இதில் 5 தீர்மானங்கலான 1.மத்திய அரசு அளித்த 10% EWS இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும் 2.தெலுங்கு மக்களுக்கு எதிரான துவேச பேச்சுக்களை ஒடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 3.தமிழ்நாட்டில் 40% மேல் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 4.தொழில் மேதை விஞ்ஞானி G.D. நாயுடு பெயரை கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் சூட்ட வேண்டும். 5.கோவையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு உழவர் பெருந்தலைவர் அய்யா C. நாராயணசாமி நாயுடு பெயரை சூட்ட தமிழக அரசு முன் வர வேண்டும்.
உடன் ஆர். கார்த்திக், சி.வி. பாலமுருகன், திரைப்பட இயக்குனர் ஜீவா பாரதி, மன்னர் கல்லூரி எஸ். ரங்கராஜ், சிறப்பு விருந்தினராக உ.வே. வேத வியாசர் சுதர்சன பட்டர் சுவாமிகள் ரங்கநாத சுவாமி திருக்கோயில் காரமடை, நேரு நகர் நந்து (எ) நந்தகோபால் மற்றும் கழக மாநில மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



