By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட கீதா ஜீவன் உள்பட 245 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட கீதா ஜீவன் உள்பட 245 பேர் கைது
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட கீதா ஜீவன் உள்பட 245 பேர் கைது

Last updated: July 20, 2026 8:11 pm
July 20, 2026
7 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஜூலை 20 –

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட திமுகவினர் 245 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டு இன்று காலை முதல் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

எம்எல்ஏவிடம் விசாரணை நடக்கும் விபரமறிந்து, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன், கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி ஆகியோர் தலைமையில் ஏராளமான திமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் திமுகவினரைச் சமாதானப்படுத்தி அனுப்ப முயன்றனர்.

இதையடுத்து, கலைந்து செல்ல மறுத்த திமுகவினர் தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு திரண்டு அதிரடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி சுகிர் தலைமையிலான போலீசார், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி அனைவரையும் கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். இதனால் போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி, மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமையில், கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், புதூர் மத்திய ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா உட்பட ஏராளமான திமுகவினர் தூத்துக்குடி – திருநெல்வேலி பிரதான சாலையில் திடீரென தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால், மறியல் போராட்டம் நடத்திய அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமையில் 25 பெண்கள் உட்பட மொத்தம் 245 பேரைப் போலீசார் கைது செய்து, மடத்தூரில் உள்ள ஒரு தனியார் சொந்தமான திருமண மண்டபத்தில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளனர்.

கோவில்பட்டி கிழக்கு நகரச் செயலாளர் சுரேஷ் தலைமையில் திரண்ட ஏராளமான திமுகவினர், மார்க்கெட் மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள தமிழரசன் படிப்பகம் முன்பாகத் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போக்குவரத்திற்கு இடையூறாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் கலைந்து செல்ல மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால், 9 பெண்கள் உட்பட மொத்தம் 35 திமுகவினரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் விவசாயக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி: மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றனர்
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: விஜயதரணி களியக்காவிளையில் பேட்டி
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்த கன மழை
உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மயிலாடுதுறைமாவட்டம்

பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அலகு காவடி வழிபாடு

May 14, 2025
88 Views
எம்.பி.,வசந்தகுமார் பெயரில் நினைவு கலையரங்கம்
எம்.ஜி.ஆர்108-வது பிறந்தநாள் விழா
புலியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ஆடுகள் வியாபாரம் அமோகம் மகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account