திருச்சி, ஏப்ரல் 25 –
திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்தல் பணிகளில் அயராது உழைத்த கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அம்மன் நகரில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அமைச்சர் தனது தொகுதி மக்களுக்கும், தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.



