திருவெண்ணெய்நல்லூர், செப். 15 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவெண்ணெய்நல்லூர் நகரத்தில் உள்ள 7 பூத்துகளில் “ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பத்தினரும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” எனும் தலைப்பில் உறுதி மொழி ஏற்றனர்.
இதில் அஞ்சுகம் கணேசன், செந்தில்முருகன் ஜோதி, சையத்நாசர், சுரேஷ் பாபு, கிருஷ்ணராஜ் செல்வம், ராஜாராம், அன்பழகன் தில்லை காமராஜ், சுரேஷ் பாபு பாக்கியராஜ் மாஸ் ராஜ்குமார், சதாம் உசேன், வெற்றிவேல்செழி, யாசர் அபாரத், சுரேஷ் வீர, ரமேஷ், அருள் தண்டபாணி, குமஸ்தா ரமேஷ், ஷாஜகான், மகேந்திரன் ரகு, கிருபாபுரி, அய்யனார், ரமா ரமேஷ், சிறுவா.மணி, ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமான மகளிர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.



