சங்கரன்கோவில், அக். 21 –
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் திருமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து தமிழகத்தின் முதலமைச்சரின் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் வடக்கு பனவடலி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோதனைகளை செய்து பயன் பெற்றனர். இந்த முகாமை ஒன்றிய செயலாளர் பெரியதுரை முன்னிலையில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு பார்வையிட்டு அங்கு செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு மருத்துவ குழுவினரிடம் இது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து முகாமை தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் முத்துலட்சுமி, துணைத்தலைவர் கிளை செயலாளர் முருகன், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், காங்கிரஸ் வீரபாகு, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வீமராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் மணிமேகலை கிளை செயலாளர்கள் திலீப், நவமணிராஜ், ஆசிரியர் கவர்னர், பாக முகவர்கள் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



