திருப்பூர், செப்டம்பர் 13 –
வழக்குகள் இல்லாத நீதிமன்றம் என்ற சூழலை உருவாக்குவது சிறந்த சமுதாயமாக மாற உதவும் திருப்பூரில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேச்சு.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். கௌதம் இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கௌதம் தனது வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் பகுதியில் வந்த கொண்டு இருந்த பொழுது எதிரே வந்த கனரக வாகனம் லாரி மோதி கௌதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக கௌதமின் தாயார் இழப்பீடு கேட்டு அவிநாசி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் காப்பீட்டு நிறுவனம் விபத்தில் உயிரிழந்த கௌதமின் குடும்பத்திற்கு 90 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் வழக்கறிஞர் பெரியசாமி வாதாடினார்.
இதே போல திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர் இன்ஃபன்ட் இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார் விடுமுறை என்பதால் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தின் மூலம் நீலாம்பூர் அருகே உள்ள நெடுஞ்சாலையில் வரும் பொழுது எதிரே வந்த கனரக லாரி மோதியதில் திவாகர் இன்பன்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வழக்கு திருப்பூர் பல்லடம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு காப்பீட்டு நிறுவனம் 40 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் வழக்கறிஞர் லாரன்ஸ் வாதாடினார்.
மேலும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் தாராபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று சாலையின் ஓரத்தில் நின்றிருந்த பொழுது அதிவேகமாக வந்த பிக்கப் வேன் மோதியதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது தொடர்பான வழக்கு திருப்பூர் மோட்டார் வாகன இழப்பீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வழக்கறிஞர் பழனிசாமி ஆஜராகி வாதாடி விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு 64 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் மூன்று வழக்குகளும் முடிவுற்ற நிலையில் மூன்று வெவ்வேறு வாகன விபத்துகளில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு காசோலை வழங்கும் நிகழ்வு பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், திருப்பூர் மாவட்ட பொறுப்பு நீதிபதியான ஜெகதீஷ் சந்திரா கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினார்.
தொடர்ந்து வழக்கறிஞர்கள் மத்தியில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா
உலகில் உள்ள அனைத்து மதங்களும் சமாதானத்தை தான் போதிக்கிறது.என்றும்தேசிய மக்கள் நீதிமன்றமும் சமரச முயற்சியை தான் மேற்கொள்கிறது.மேலும் மக்களும் சமரச முடிவுக்கு வரவேண்டும் அதுவே சமுதாயத்திற்கு நல்லது.என்றும் வழக்கறிஞர்களும் லோக் அதாலத் மூலம் வழக்குகள் விரைவில் முடிவடைவதால் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.மேலும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் இன்சூரன்ஸ் அதிகாரிகள் சின்ன விஷயங்களுக்காக வழக்கை தாமதப்படுத்தக் கூடாது. அதேபோல் நிலங்களை கையகப்படுத்தப்படும் போது அரசு அலுவலர்கள் இழப்பீட்டை உடனடியாக வழங்க முன்வர வேண்டும். வழக்குகள் இல்லாத நீதிமன்றம் என்ற சூழலை உருவாக்குவது சிறந்த சமுதாயமாக மாற உதவும் என்றும் பொறுப்பு நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த விபத்து வழக்குகளில் சிறப்பாக வழக்கை முடித்த வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதி பாராட்டினார்.



