திருச்சி, மே 19 –
திருச்சியில் பாபு ரோடு பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி, அதிமுக கவுன்சிலரும், அதிமுக மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளருமான அரவிந்தன் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து மதுக்கடைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுப்பு போல் வைக்கப்பட்டிருந்த தகர தட்டியையும் அகற்றினர்.
இந்தப் போராட்டத்தால் பாபு ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டை போலீசார் கவுன்சிலர் அரவிந்தன் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



