திண்டுக்கல், மார்ச் 18 –
திண்டுக்கல் மாவட்டம், பாரதிபுரத்தைச் சேர்ந்த ஜெ. கண்ணன் (59) என்பவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் கடந்த 2025, மே 14-ஆம் தேதி அடைக்கப்பட்டார்.
சிறுநீரக மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காரணமாக மார்ச் 8-ஆம் தேதி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


