திருச்சி, ஜூன் 16 –
திருச்சி திருவானைக்காவலில் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், அரசு விதிமுறைகளுக்கு மாறாக, விபத்து அதிகம் ஏற்படும் கொள்ளிடம் பைபாஸ் சாலையில் ‘ஸ்கை 11-11’ என்ற தனியார் மது பார் செயல்பட்டு வருவதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் இந்த பாருக்கு அருகே இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலியான பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கட்சி வலியுறுத்தியது. உடனடியாக இந்த பாரை மூடக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



