கருங்கல், ஜூலை 17 –
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திப்பிறமலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது. கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் தலைமை வகித்தார். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் முகாமில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டு சேவைகளை கேட்டறிந்தார். பின்னர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அவர் பேசியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குமரி மாவட்டத்தில் 341 முகாம்கள் நடக்கிறது. முதற்கட்டமாக ஊரக பகுதிகளில் 58 முகாம்களும், நகர்ப்புற பகுதிகளில் 56 முகாம்கள் என மொத்தம் 114 முகாம்கள் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்களில் கீழ் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் விடுப்பட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தல், அரசின் இலவச வீடு கேட்டு விண்ணப்பித்தல், நிலம் இல்லாதோர் இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்தல், தாட்கோ கடன்கள், இ-பட்டா, பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம், கல்வி உதவித்தொகை, புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தல், தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் டாம்கோ கடன், ரேசன் கார்டு பெயர் மாற்றம் மற்றும் விண்ணப்பித்தல், மின்சார இணைப்பு மாற்றம், பெயர் திருத்தம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை, ஆதார் பெயர் மாற்றம், புதுப்பித்தல், விண்ணப்பித்தல், வரி உரிமங்கள் மற்றும் அனுமதிகள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், தெருவோர விற்பனையாளர் அடையாள அட்டை, சொத்துவரி, பெயர் மாற்றம், கட்டிடத் திட்ட ஒப்புதல், ஓய்வூதியம், தாமதமான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள், உபகரணங்கள், பராமரிப்பு மானியங்கள், படுத்துதல், மின் வாடகை, கால்நடை கோழிவளர்ப்பு, புதிய வீட்டு வரி, வீட்டு வரி பெயர் மாற்றம், குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.
முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை 15 துறைகளை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் இம்முகாமில் கலந்து கொள்ளும் அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள், சந்தேகங்களை, பிரச்சனைகளை களிவுடன் கேட்டறிந்து, பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணபங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை சரிபார்த்து தகுதியான விண்ணப்பங்களுக்கு 45 தினங்களுக்குள் தீர்வு காணப்படும். இவ்வாறு பேசினார். இந்த முகாமில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கிள்ளியூர் தாலுகா பெறுப்பாளர் ஈஸ்வரநாதன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அஜிதா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் சாந்தி, திட்ட அலுவலர் சக்தி ஆனுமம்மா மற்றும் 15 – துறைகளை சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



