திண்டுக்கல், ஜுலை 15 –
திண்டுக்கல் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கல்வி தந்தை ஐயா காமராசர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் தந்தை அய்யா தொல்காப்பியன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் க. மைதீன் பாவா தலைமையில் கல்வி தந்தை காமராஜர் அவர்களின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செல்லுத்தப்பட்டது. ஐயா தொல்காப்பியன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருசித்தன் மாநிலத் துணைச் செயலாளர், கு. ஆற்றலரசு தொகுதி துணை செயலாளர், அ. பாபு சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர், ஆனந்தராஜ் நகர செயலாளர், இருதயராஜ் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர், பால்ராஜ் நகர பொருளாளர், சவரியம்மாள் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர், திவ்யா மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர், ஹைதர் அலி தொ.வி.மு தொகுதி செயலாளர், சுப்பிரமணி ஒன்றிய பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு தந்தை ஐயா தொல்காப்பியன் அவர்களுக்கும் கல்வித் தந்தை காமராஜர் அவர்களுக்கும் திண்டுக்கல் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தினர்.