திண்டுக்கல், ஜூலை 19 –
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள M.V.M. முத்தையாபிள்ளை மகளிர் கலை கல்லூரியின் முதல்வர் க.லட்சுமி அவர்களிடம் திண்டுக்கல் மாவட்ட மனித உரிமை அணி பொறுப்பாளர் S.R. முத்துமணி தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. அதில் M.V.M. முத்தையாபிள்ளை மகளிர் கலை கல்லூரியின் பேராசிரியையாக பணிபுரியும் நிகிதா என்பவர் கடந்த 27.06.2025ம் தேதி மதுரை, திருப்புவனம் அருள்மிகு மடப்புர காளியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு இவரும், இவரது தாயாரும் சென்றுள்ள போது அங்கு அருள்மிகு மடப்புர காளியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் பணிபுரியும் அஜித்குமார் என்பவரிடம் நிகிதா வேலையும் செய்ய சொல்லி பின் மேற்படி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்து மேற்படி புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அஜித்குமார் என்பவரை அடித்து கொன்று விட்டார்கள். இதன் விபரமாக மதுரை நீதிமன்றத்திலும், மேலும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையிலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது மதுரை உயர்நீதிமன்றம் கிளை CBCID விசாரணைக்கு உத்தரவிட்டு விசாரணை நடைபெற்று வருவது தாங்களுக்கும் மேலும்
தமிழக மக்களுக்கும் நன்கு தெரிந்ததே.
இந்நிலையில் மேற்படி நிகிதா அஜித்குமார் என்பவர் மீது நகை திருட்டுப்புகார் உண்மையா? உண்மையில்லையா? என்பதை விசாரித்து வரும் வேலையில் நிகிதா மீது பல குற்றச்சாட்டுக்களும், பல வழக்குகளும் இருப்பதாக தெரிய வருகின்றது. இதுமட்டுமல்லாது மேற்படி நிகிதா பல நபர்களிடம் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்று தெரிய வருகின்றது. ஆகவே சமூகம் அவர்கள் மேற்படி நிகிதா மீது உள்ள புகார்கள் இல்லையென்று நீதிமன்றத்தின் விசாரணையில் நிரூபணமாக உத்தரவு பெற்று வரும் வரை தாங்களது நிர்வாகத்தில் வேலைக்கு அனுமதிக்க மறுப்பு தெரியப்படுத்திக் கொள்கிறோம். மேலும் நிகிதா சட்டத்திற்கு புறம்பாக இருந்து கொண்டு பேராசிரியையாக பணிபுரிந்தால் அவரிடம் பயிலும் வருங்கால மாணவியர்களின் எதிர்காலம், வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகி விடும். இப்படிப்பட்ட ஒரு பேராசிரியை கற்றுத்தரும் கல்வியானது வருங்கால மாணவ, மாணவியர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
எனவே மேற்படி நிகிதா சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நிரபராதி என உத்தரவு பெற்று வரும் வரை இப்படிப்பட்ட பேராசிரியை தங்களது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்லுாரியில் தொடர்ந்து பணி செய்து வருவதை வன்மையாக கண்டித்து ஆட்சேபனை (மறுப்பு) செய்கின்றோம். எனவே மனித உரிமை எடுப்போம், மனிதநேயம் காப்போம் என மனுவில் தெரிவித்து உள்ளார்கள். இந்நிகழ்வில் திண்டுக்கல் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் செபஸ்டியன், நாமக்கல் A. ராஜேந்திரன், பழனி S. பழனிச்சாமி, வேடசந்தூர் A. நல்லச் சாமி, மாரம்பாடி V. வீர முனியாண்டி, திண்டுக்கல் C. கண்ணன்,
திண்டுக்கல் T.G. கணேசன், திண்டுக்கல் M. வெற்றிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.