திண்டுக்கல், ஜூலை 4 –
திண்டுக்கல்லில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பவள விழா முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் பவள விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா பழனி ரோடு எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காப்பீட்டு ஊழியர் சங்க மதுரை கோட்ட சங்கத் துணைத் தலைவர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் சங்க கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார். கிளை-1 தலைவர் பாரத் உறுதிமொழியை வாசித்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் வளர்ச்சி அதிகாரிகள், முதல்நிலை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். கிளை-2 தலைவர் தங்கவேலு நன்றி கூறினார்.



