By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு: இரண்டரை ஆண்டுகளாக பணி துவங்காமல் பக்தர்களை ஏமாற்றும் பொதுப்பணித்துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு: இரண்டரை ஆண்டுகளாக பணி துவங்காமல் பக்தர்களை ஏமாற்றும் பொதுப்பணித்துறை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு: இரண்டரை ஆண்டுகளாக பணி துவங்காமல் பக்தர்களை ஏமாற்றும் பொதுப்பணித்துறை

Last updated: January 10, 2026 7:29 pm
January 10, 2026
31 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 10 –

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் மஹா தேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் 2 வது சிவாலயமும், ரிஷபராசி பரிகார ஸ்தலமுமாக மஹா உள்ளது. இந்த கோயிலில் மஹா சிவராத்திரி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் பிரதோஷம், மாத சிவராத்திரி, திருவாதிரை, பெளர்ணமி உட்பட விசேஷ தினங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள்.

தினசரி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த கோயில் அருகே தாமிரபரணி ஆற்று பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்ற போது ஆறு திசை மாறி ஓடியது. இதன் காரணமாக மஹா தேவர் ஆலயத்தின் சுற்று சுவரோடு இருந்த மண் திட்டு சிறிது சிறிதாக ஆற்று வெள்ள பெருக்கு அடித்து சென்றது. இதனால் கோயில் சுற்று சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. சுற்று சுவர் இடிந்தால் அதன் தாக்கம் காரணமாக கோயிலும் இடியும் அபாயம் ஏற்பட்டதால் சுற்று சுவரை சுற்றி பாதுகாப்பிற்காக பக்தர்கள் முயற்சியால் பெரிய பாறாங்கற்கள் கொட்டபட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆண்டு தோறும் மழை காலங்களில் ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக இந்த பாராங் கற்களை ஆற்று நீர் இழுத்து சென்று வருவதால் இந்த கோயில் சுற்று சுவரோடு சேர்த்து பக்க சுவர் கட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். அதன் எதிரொலியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அப்போது தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த தற்போது பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இந்து அறநிலையத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் கோயிலின் ஆபத்தை நேரில் ஆய்வு செய்து, பனிக்காக இந்து அறநிலையத்துறை கோயில் நிதியில் இருந்து 84 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியை பொதுபணி துறைக்கு கொடுத்து ஒப்பந்தம் விடுபட்டு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இது வரை பணிகள் துவங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இந்து இயக்கங்கள் மற்றும் பக்தர்கள் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டு புகார் அளித்தால் அந்த நேரம் உடனே பணிகள் துவங்க போவது போன்ற பாவனைகள் காண்பித்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணிகள் துவங்காத சூழ்நிலை நீடிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணிகளை அமைச்சர் மனோதங்கராஜ் துவங்கி வைத்து சென்ற பிறகு கூட ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பக்கச்சுவர் கட்டுமான பணிகள் துவங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். பக்தர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணி துவங்காதது குறித்து கேட்டால் மண் தட்டுபாடு கனிமங்கள் தட்டுபாடு என்று கூறி பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர்.

இதனால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் நேரத்தில் அந்தரத்தில் தொங்கும் கோயில் சுற்று சுவர் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காம்பவுண்ட் சுவர் இடிந்தால் கோயில் மற்றும் பக்தர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு பழமை வாய்ந்த ஆசார ரீதியான வரலாற்று பொக்கிஷம் அழியும் பாதையில் செல்லும். எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அலைமோதிய சுற்றுலாப் பயணிகள் கூட்டம்
குமரியில் கொடிநாள் வசூல் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா துவக்கி வைத்தார்
கோவையில் ‘ஜூவல் ஒன்’ புதிய பிரம்மாண்ட ஃபிளாக்ஷிப் ஷோரூமை நிறுவனர் சீனிவாசன் திறந்து வைத்தார்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் வேட்பு மனு தாக்கல் செய்தார்
தக்கலை அருகே இளம்பெண்ணிடம் அத்துமீறிய மத போதகர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் தவெக எம்.எல்.ஏ சுகுமார் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் செய்தியாளர் சந்திப்பு

May 15, 2026
17 Views
கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து
ஊட்டச்சத்து வார விழாவை விட்டு விழிப்புணர்வு
நீச்சல் போட்டியில் கலசலிங்கம் பல்கலை9 தங்கம்,3 வெள்ளி,1 வெண்கலம்
வடசேரி பகுதி அவலநிலை: பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account