By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சாமிதோப்பு. அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாமிதோப்பு. அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா
கனஂனியாகுமரி

சாமிதோப்பு. அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா

Last updated: June 2, 2025 4:57 pm
June 2, 2025
33 Views
Share
SHARE

தென் தாமரைகுளம்,மே. 31.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், தொடர்ந்து அன்னதர்மமும்,அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.

விழாவின் எட்டாம் நாளான நேற்று 30- ம் தேதி வெள்ளிக்கிழமை கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு பழங்கள் மற்றும் மலர்கள் அலங்காரத்துடன் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடந்தது. 4.30 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமைப்பதி முன்பிருந்து புறப்பட்ட வெள்ளை குதிரை வாகனம் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது.
அங்கு அய்யா வழி பக்தர்களின், ‘அய்யா சிவ சிவா அரகரா அரகரா‘ என்ற பக்தி கோஷத்திற்கிடையே,அங்கு தலைப்பாகை அணிந்து திருநாமம் தரித்து காவி உடை அணிந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் முன்னிலையில் அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் குதிரை வாகனம் செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக சுற்றி இரவு 11 மணிக்கு வாகனம் சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. வாகனம் வரும் வழிகளில் அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து
வெற்றிலை, பாக்கு, பழங்கள், பன்னீர் ஆகியவற்றை சுருளாக படைத்து வழிபட்டனர். பின்னர் தலைமை பதி வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் அய்யா வைகுண்ட சுவாமி காட்சியளித்தார்.
தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும், பெரிய யுகப்படிப்பும், அன்ன தர்மமும் நடந்தது. இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்திர வாகன பவனியும் நடைபெறுகிறது. 2-ம் தேதி (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.இரவு12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி, தொடர்ந்து திருக்கொடி இறக்கியதும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு போதிப்பும், சிறப்பு வேண்டுதலும்
நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமை குரு பால. பிரஜாபதி அடிகளார் தலைமையில் குருமார்கள் பால. ஜனாதிபதி, பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு,நேம்ரிஷ் செல்லா ஆகியோர் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணி
சேனம்விளை அரசு தொடக்க பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் விஜய்வசந்த் எம்பி திறந்தார்
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல; பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி !கன்னியாகுமரியில் நயினார் நாகேந்திரன் பேட்டி
நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: ரவுடி கைது

February 9, 2026
19 Views
திமுக மாநில இளைஞரணி சார்பில் தமிழக துணை
சிறுவனை தாக்கியவர் மீது வழக்கு
எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அவதி.
சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account