தருமபுரி, ஜூலை 22 –
தருமபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரோஜா தலைமையில் நடைபெற்றது. ஏசிடியூ ஐஎன்டியூசி மாநில தலைவர் கோவிந்தசாமி வரவேற்றார். காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் தீர்த்தராமன் முன்னிலை வகித்தார். மகளிர் அணி மாநில தலைவர் சையது ஹசீனா புதிய நிர்வாகிகளான மாவட்ட துணை தலைவர் சின்னம்மாள், தேன்மொழி, பொதுசெயலாளர் திரெளபதி, வளர்மதி, இணை செயலாளர் ம தம்மாள், பொருளாளர் தேவகி, முருகம்மாள் ஆகியோரை வாழ்த்தி கௌரவித்து பாராட்டினார்.
இதையடுத்து நடந்த செயற்குழு கூட்டத்தில் மகளிர் அணி மாநில தலைவர் சையது ஹசீனா சிறப்புரையாற்றி பேசினார். கூட்டத்தில் ஐஎன்டியூசி சர்க்கரை பிரிவு முருகேசன், சேலம் மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் கோபிகுமரன், ஓபிசி மாநில துணைத்தலைவர் பர்வேஸ், மணிகண்டன், சதீஷ், வெற்றிவேந்தன், சம்பத், முபாரக், நகர தலைவர் வேடியப்பன், ஜெய்சங்கர் உள்ளிட்ட எராளமானவர்கள் கலந்து கொண்டனர்.