தருமபுரி, செப்டம்பர் 08 –
தருமபுரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஓட்டை திருடாதே மத்திய அரசை கண்டித்து மாவட்ட இளைஞரணி தலைவர் வெற்றிவேந்தன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மத்திய மோடி அரசை கண்டித்தும் ‘ஓட்டை திருடாதே’ என பதாதைகளுடன் கோஷங்கள் எழுப்பி தருமபுரி காந்தி சிலை அருகே துவங்கிய பேரணி கடைவீதி, 4 ரோடு வழியாக ரோட்டரி அரங்கம் வரை சென்று நிறைவடைந்தது.
பின்னர் இருசக்கர வாகனத்தில் பேரணியில் கலந்து கொண்ட வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்ட இளைஞரணி தலைவர் வெற்றிவேந்தன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில இளைஞரணி து. தலைவர் B. தினேஷ் பங்கேற்று பேசினார். இளைஞர்கள் ஒற்றமையாக செயல்பட்டு காங்கிரசை வலுப்படுத்த வேண்டும். அதிக இளைஞர்களை காங்கிரலில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தீர்த்தாராமன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயசங்கர், சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் முபாரக் பாஷா, நகர தலைவர் வேடி, மாவட்ட விவசாய பிரிவு தலைவர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள், இளைஞரணி தொண்டர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.



