May 23, 2025: தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் எம்எல்ஏ தலைமையில் குழு உறுப்பினர்கள் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வில் எம்எல்ஏக்கள் உதயசூரியன், சதன் திருமலை குமார், சுதர்சனம், சேவூர் ராமச்சந்திரன், பாலாஜி, வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த குழுவினர் நல்லம்பள்ளி வட்டம், நார்த்தம்பட்டியில் வனத்துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மரகத பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதைத் தொடர்ந்து அதியமான் கோட்டை உள்ள இந்து சமய அறநிலை துறையின் சார்பில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் காலபைரவர் கோவில் பக்தர்கள் தங்கள் விடுதியை ஆய்வு செய்தனர். அப்போது கட்டிடத்தின் சுவர்களில் சில இடங்களில் விரிசல் இருந்ததால் கட்டுமான பணியை தரமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து சனத்குமார் நதி, மாவட்ட சிறைச்சாலை ரூ.19.50 கோடி மதிப்பில் தருமபுரி – பாப்பாரப்பட்டி இருவழிச் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்துதல் பணி, பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். அப்போது 17 விவசாயிகளுக்கு ரூ.8.82 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மதிப்பீட்டு குழு தலைவர் வழங்கினார். இதை யடுத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டறங்கில் மாவட்ட திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் கள ஆய்வு கூட்டம் குழுவின் தலைவர் காந்தியை ராஜன் தலைமையில் நடைபெற்றது. குழு தலைவர் காந்தராஜன் எம்எல்ஏ உரையாற்றினார். மேலும் ஐந்து பேருக்கு ரூ.3 லட்சத்தில் இலவச வீட்டு மனை பட்டா ,ஒரு பயனாளிக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் வீட்டிற்க்கான ஆணை, ஒரு மகளிருக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதி உதவி, தொழிலாளியின் வாரிசுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.8.55 லட்சம் மதிப்பில் அரசு நல திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.72 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா ,போலீஸ் சூப்பிரண்ட் மகேஸ்வரன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.