தருமபுரி, செப்டம்பர் 27 –
தருமபுரி மாவட்ட வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்து விட்டு வருவாய் துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் வட்டாச்சியர் அலுவலகம், நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் வருவாய் துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளித்திட வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் அளவுகடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். இத்திட்டத்தின் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பொது மக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் காலம் முறைய ஊதியத்தில் இருப்பிட வேண்டும்.
அரசுப் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தின் வரிய சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% என குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து ஏற்கனவே இருந்ததை போன்று 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜூலை 1 ஆம் நாளை பாசலி ஆண்டின் தொடக்கம் வருவாய் துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



