தருமபுரி, ஜூலை 20 –
தருமபுரி நகராட்சி 21வது வார்டுக்கு உட்பட ஆஞ்சநேயர் கோவில் தெருவில் அடிப்படை வசதிகள் அமைத்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இந்த மனுவில் கூறியதாவது: தருமபுரி நகராட்சி க்கு உட்பட்ட 21 – வது வார்டு ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள் ரோடு வசதி அமைக்க அரசிடம் இடம் ஒப்படைத்து உள்ளார்கள். இதுபோக பூங்கா அமைக்க 2,000 சதுர அடி நிலம் அரசிடம் ஒப்படைத்து உள்ளார்கள். இவை அனைத்தும் தந்தும் இதுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுபோக மழை காலங்களில் மழை நீர் சாலையில் தேங்கி நிற்பதால் கொசுக்கள், விஷப்பூச்சிகள், பாம்புகள் அதிகம் நடமாவதால் பொதுமக்கள், பெரியவர்கள், சிறியவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சாலையை சீர் செய்து தெருவில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் அமைத்து தரவேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும். பாதாள சாக்கடை அமைத்து தர வேண்டும். குடிநீர் தண்ணீர் எடுக்க சிறிது தொலைவில் சென்று எடுத்த வருவதால் குடிநீர் இணைப்புகள் அமைத்து தர வேண்டும் ஆகிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.



