தருமபுரி, செப்டம்பர் 29 –
தருமபுரியில் தமிழக ஒக்கிலிக கவுடர் மகாஜன சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பி.கே. தாஸ் வரவேற்றார். ஆண்டறிக்கையை ஜனகரன் வாசித்தார். வரவு, செலவு அறிக்கையை பிரகாஷ் வாசித்தார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையின் சென்னை கட்டிடம் சீரமைத்தல், மாநில இளைஞரணி, மகளிர் அணி தோற்றுவித்தல், கோவை, ஈரோடு மாவட்ட சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் மாநிலத் தலைவர் அனுமதியுடன் சிறப்பு கோரிக்கைகள் ஆகியவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நிர்வாக அறங்காவலர்கள் கிருஷ்ணசாமி, பழனிசாமி, ரகுபதி, முருகேசன், குப்புராஜ், சந்தோஷ்குமார், வெங்கடேசன், மாநில துணை செயலாளர் ஆர். ஜெகநாதன், விஸ்வநாதன், மூர்த்தி, கார்த்தி, சோமசுந்தரம், விமல்ராஜ், தண்டபாணி மற்றும் தமிழக ஒக்கிலிக கவுடர் மகாஜன சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மயில்சாமி நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை தருமபுரி நகர டி.ஏ. செளந்தரராஜன், ரமேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.



