தருமபுரி, செப்டம்பர் 13 –
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 9-ம் தேதி காணொலி மூலம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கிய ஆலோசனைகள் குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், 15-ம் தேதி பேரறிஞர் அண்ணாபிறந்த நாள் விழாவை தருமபுரி, பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகளில் பூத் வாரியாக தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்று சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், 17-ம் தேதி கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வது குறித்தும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்ம செல்வன், அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர்கள் காவிரி, பெரியண்ணன், சண்முகம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கௌதம், துணை அமைப்பாளர் உதயசூரியன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



