தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் நத்தம் பகுதியில் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கைப்பந்து போட்டியை நீலம் பண்பாட்டு மையம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், அதியமான், சிலம்பரசன், சண்முகம் ஆகியோர் தலைமையில் ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என்சிசி பாய்ஸ் நத்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாகஜான்சன் பாபு தொழிலதிபர் பி. பள்ளிப்பட்டி, நாகேந்திரன் மாவட்ட செயலாளர் தலித் விடுதலைக் கட்சி, சரவண வேலு மக்கள் சட்ட உரிமை கள் கழகம் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் அணி, பாலகிருஷ்ணன் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் அணி, சுரேஷ் மாவட்ட தலைவர் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் தருமபுரி ஆகியோர் கலந்து கொண்டு கைப்பந்து போட்டியை துவக்கி வைத்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு ரூ. 20,025 ஜான்சன் பாபு தொழிலதிபர் பி. பள்ளிப்பட்டி , இரண்டாம் பரிசு ரூ.15,025 மாவட்ட செயலாளர் ஆ. மணி எம் பி , மூன்றாம் பரிசு ரூ.10,025 பிரபு ராஜசேகர் தருமபுரி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர், நான்காம் பரிசு ரூ.5,025 சந்திரசேகர் தருமபுரி தெற்கு ஒன்றிய பொருளாளர், ஐந்தாம் பரிசு ரூ.3,025 முருகன் கிளைச் செயலாளர், ஆறாம் பரிசு, ஏழாம் பரிசு, எட்டாம் பரிசு ரூ.1,025 வெற்றிவேல், உதயம் முத்தமிழன், சதீஷ் ஆகியோர் வழங்கினார்கள். இந்த போட்டியில் நீலம் பண்பாட்டு மைய நிர்வாகிகள் சிலம்பரசன், சண்முகம், அதியமான், சரவணன், பிரவீன், சிவனேசன், அஜித், சக்திவேல் ,அன்பழகன், திருப்பதி, அதியமான், அருள், கலைவாணன், சவுன்ந்தர், அஜித், வெற்றி, வினோத் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்



