தருமபுரி, அக்டோபர் 06 –
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து தங்களுடைய நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நண்பர்களை சந்தித்து கை கொடுத்துக் கொண்டு உற்சாகத்துடன் வகுப்பறைக்குச் சென்றனர். பள்ளி முன்பு சாலை உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பாக சாலையை கடந்து செல்வதற்கு போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



