தருமபுரி, அக்டோபர் 01 –
தருமபுரி பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் மாவட்ட சங்கத் தலைவர் எம். சுப்பு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர்கள் அ. ஆஞ்சலா, எம். மீனாட்சி, ஜெயக்கொடி, மாவட்ட பொருளாளர் ஆர். எல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கம் மாவட்ட செயலாளர் கே. இரவிச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தில் துவக்கி வைத்து பேசினார். தருமபுரி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளான தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதா, மாதம் சம்பளம் பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டியும், அடையாள அட்டை வழங்க வேண்டியும், தினமும் வருகை பதிவேட்டில் கையொப்பம் பெற வலியுறுத்தியும்,
தூய்மை பணி செய்ய உபகரணங்கள் வழங்க வேண்டியும், தமிழ்நாடு அரசு ஆணைப்படி ரூ. 6,000+6503(DA)= 21,503 சம்பளம் வழங்கவும், 11 ஆண்டுகளாக பணி செய்யும் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட சங்க துணைச் செயலாளரும், இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜெ. பிரதாபன், சங்க மாவட்ட துணைச் செயலாளர் வெ.பை. மாதையன், பைசுஅள்ளி மாதையன், சின்னகாம்பட்டி ஜி. பச்சாகவுண்டர் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் சங்க துணைச் செயலாளர் அனிதா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் டி. சரஸ்வதி, பி. மேனகா, பி. ஜெயமதி, மாதம்மாள், ரேணுகா சத்தீஸ்கரில் எம். வீரம்மாள், ராஜேஷ், மகேஷ், ராமாயி, கண்ணகி, பாலாஜி, அஞ்சலா, ஆனந்தி, கவிதா, வள்ளி உட்பட நூற்று ஐம்பத்திற்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். கூட்டத்தின் இறுதியில் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்க நிர்வாகிகள் அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் .



