தருமபுரி, செப்டம்பர் 18 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75-வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் ஸ்ரீ ஐயப்பன் கோவில் மற்றும் தேரடி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் மத்திய நல திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமையில் நடைபெற்றது. நகர பொது செயலாளர்கள் தண்டபானி, ஜெய்கணேஷ், பொருளாளர் முனியப்பன், நகர செயலாளர் முரளி, நகர துணைத் தலைவர் மணிவண்னன், முன்னாள் ஒன்றிய பொது செயலாளர் பெரியண்ணன், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழவும், தொடர்ந்து பாரதத்தின் பிரதமராக இருந்து இந்தியாவை வளர்ச்சி பாதையில் வழி நடத்தி செல்லவும், கடவுளிடம் வேண்டி பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு பிரசாதம் மற்றும் அண்ணதானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதேவி, மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர் சின்னவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



