தருமபுரி, ஜூன் 28 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நுகர்பொருள் வணிபக் கழக கிடங்கில் இருந்து முதன்மை சங்கங்களுக்கு நகர்வு செய்யப்படும் பொருட்களில் அரிசி இரண்டு கிலோ முதல் 5 கிலோ வரையிலும் மற்றும் சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள் ஒரு கிலோ முதல் 2 கிலோ வரையிலும் எடை குறைவாக வழங்கப்படுகிறது. எனவே அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை மானியத்தில் வழங்கப்படுவது உறுதி செய்ய வேண்டும்.
விற்பனையாளர்கள் மாவட்ட தேர்வாணைக்குழு மூலம் நியமனம் செய்யப்படும் பொழுது பணி மூப்பு வரிசை உறுதிப்படுத்துகிறது. அடுத்த பதவி உயர்வுக்கு இதே பணி மூப்பை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் பதிவி உயர்வில் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட தலைவர்கள் விநாயகம், சின்ன பையன், மாவட்ட இணைச் செயலாளர்கள் கோவிந்தராசு, துரை ராஜ் ,மாவட்ட போராட்ட குழு தலைவர் ஸ்டாலின் மணி குமார், மாவட்ட போராட்டக் குழு செயலாளர் ராம்ராஜ், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.