தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி தலைமையில் நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கன ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் குமார் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாட்டான் மாது, தங்கமணி, சண்முகம், ரேணுகாதேவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



