களியக்காவிளை, அக். 24 –
களியக்காவிளையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவு போட்டிருந்தார். இந்நிலையில் களியக்காவிளை இன்ஸ்பெக்டர் மகிந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது களியக்காவிளை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அவர் ராமன் புதூர் பகுதியை சேர்ந்த ஜோகன் (52). அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


