By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!

Last updated: June 5, 2026 4:52 pm
June 5, 2026
28 Views
Share
SHARE

கோவை, ஜூன் 05 –

கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனமான பாலி பைப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுமார் 15 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 37.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிவிசி மூலப்பொருட்களைத் திருடி கோவையில் உள்ள பைப் மாஸ்டர் என்ற மற்றொரு நிறுவனத்திற்கு கள்ளச்சந்தையில் விற்றுவிட்டு, கணக்கு புத்தகங்கள் மற்றும் சிசிடிவி ஹார்டு டிஸ்க்குடன் தலைமறைவான ஸ்டோர் மேனேஜர் முருகானந்தம் (34) என்பவரை போலீசார் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பாலி பைப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் அளித்த புகாரில் போலீஸ் தரப்பில் முதல் தகவல் அறிக்கையில் கூறப்படுவதாவது: கோவை விளாங்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் ‘பாலி பைப்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்திற்கு சென்னையைச் சேர்ந்த வினய்கிராவத் என்பவர் வெளிநாடுகளில் இருந்து பிவிசி ரெசின் மற்றும் சுண்ணாம்பு உள்ளிட்ட மூலப்பொருட்களை இறக்குமதி செய்து வருகிறார். இந்த மூலப்பொருட்கள் விளாங்குறிச்சி ரத்தினகிரி நகரில் உள்ள குடோனில் வைக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது.

தணிக்கையில் அம்பலமான மோசடி:

இந்த குடோனில் பாலி பைப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஸ்டோர் மேனேஜர் திருச்சி தொட்டியத்தைச் சேர்ந்த முருகானந்தம் (34) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டோர் மற்றும் டிரான்ஸ்போர்ட் மேனேஜராகப் பணியாற்றி வந்தார். இவர் மூலப்பொருட்களை விநியோகம் செய்ய தனக்குச் சொந்தமான இரண்டு சரக்கு வாகனங்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2026 பிப்ரவரி 21-ம் தேதி நிறுவனத்தின் வருடாந்திர கணக்கு தணிக்கை (Audit) நடைபெற்றது. அப்போது குடோனில் இருந்த இருப்பைச் சரிபார்த்தபோது, கம்பெனிக்குச் சொந்தமான சுமார் 52.500 டன் பிவிசி ரெசின் மூலப்பொருட்கள் குறைவாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 37.5 லட்சம் ரூபாய் ஆகும்.

ஹார்டு டிஸ்க்குடன் மேனேஜர் முருகானந்தம் தலைமறைவு:

தணிக்கை நடப்பதற்கு முந்தைய நாள் முதலே ஸ்டோர் மேனேஜர் முருகானந்தம் பணிக்கு வராமல் தலைமறைவாகியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கம்பெனி நிர்வாகம், குடோனில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தது. அதில், கடந்த பிப்ரவரி 20-ம் தேதி மதியம் முருகானந்தம் கம்பெனிக்குத் தெரியாமல் வரவு-செலவு கணக்கு புத்தகங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் சிசிடிவி பதிவுகள் அடங்கிய ‘ஹார்டு டிஸ்க்’ (Hard Disc) ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், முறையான ஆவணங்கள் இன்றி நிறுவனத்தின் மூலப்பொருட்களைத் தனது சொந்த வாகனங்களில் ஏற்றிச் சென்று, கள்ளச்சந்தையில் விற்றுப் பணத்தைச் சுருட்டியதும் அம்பலமானது.

போலீசார் விசாரணை:

இதுகுறித்து கம்பெனி மேலாளர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், நிறுவனத்திற்குத் தெரியாமல் 37.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் திருடி மோசடி செய்த ஸ்டோர் மேனேஜர் முருகானந்தம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் திருடப்பட்ட பிவிசி மூலப்பொருட்களை கோவையில் உள்ள பைப் மாஸ்டர் என்ற மற்றொரு நிறுவனத்திற்கு கள்ளச்சந்தையில் விற்றதை அடுத்து அந்நிறுவனத்தை நிர்வகித்து வந்த விக்ரம் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சட்டமன்றத் தேர்தலில் தளவாய் சுந்தரம் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு அதிக வாக்குகள் பெறுவேன்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் பேட்டி
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அவர்களுக்கு தமிழ் இலக்கியப் பாசறை சார்பில் “கவிச்சிறகு விருது”
சென்னை வேர்மேட் கண்காட்சியை அமைச்சர் பி. மதன்ராஜா துவக்கி வைத்தார்
போத்தாபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் ஊழலுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு

September 17, 2024
622 Views
சுற்றுலா தகவல் மையம்மாவட்ட ஆட்சித் தலைவர்
காலாவதியான இனிப்புகளை அப்புறப்படுத்த உணவு
திமுக சார்பில் வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்குவதற்கான துவக்க நிகழ்ச்சி
நாகர்கோவில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது; 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account