வேலூர், ஜூலை 10 –
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழாவில் சிரசு ஊர்வலமும், பொங்கலிடுதலும், கூழ்வார்த்தலும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், கொக்ககளிக்கட்டை, சிலம்பாட்டம் குழுவினர்களின் நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் வி. சேட்டு, பிஜேபி முன்னாள் மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஆர். அஸ்வினி, துர்கா, நாகு இருசக்கர வாகன மெக்கானிக்கல், டீக்காராமன் , விஜயகுமார் கேபிள் ஆப்ரேட்டர், செல்லதுரை, மணிகண்டன், ஆஷா மற்றும் தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமம் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர்கள், பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். திருவிழாவில் விழா குழுவினர்களின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.