தஞ்சாவூர் மே. 14.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வொண்டர் வேர்ல்ட் தீப் பார்க் நடிகர் பிரபு திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டி வடக்கு ஊராட்சியில் தீம் பார்க் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா நடை பெற்றது
நிகழ்ச்சியில் நடிகர் பிரபுவின் மனைவி புனிதவதி குத்து விளக்கு ஏற்றினார். நடிகர் பிரபு கல்வெட்டை திறந்து வைத்து பேசினார்
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கப்பலூர் கே ஆர் ராமசாமி அம்பலம் தலைமை வகித்தார் தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம்மற்றும் தனசேகர வாண்டையார் மருத்துவர் வி வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் திருச்சி மாவட்ட தாமாகா தலைவர் குணா பூதலூர் ஒன்றிய குழு தலைவர் கல்லணை செல்லமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை தஞ்சாவூர் பொறியாளர் விஜய் பிரகாஷ் மருத்துவர் ரஞ்சித் பிரகாஷ் செய்திருந்தனர்
இந்த தீம் பார்க் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சலுகையாக பெரியவர்களுக்கு ரூபாய் 700 கட்டணமும், மூத்த குடிமக்களுக்கும் சிறார்களுக்கும் ரூபாய் 600 கட்டணமும் 90 சென்டிமீட்டர் குறைவான உயரம் கொண்ட குழந்தைகளுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.