தஞ்சாவூர், ஜூலை 31 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குனர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சையை அடுத்துள்ள ரெட்டிப் பாளையத்தில் உள்ள பன்முக கால்நடை மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கால்நடைகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? தடுப்பூசிகள் முறையாக செலுத்தப்படுகிறதா? ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருந்துகள் உரிய முறையில் குளிர்சாதன வசதியுடன் பராமரிக்கப்படுகிறதா? எனவும் பார்வையிட்டார்.
பின்னர் தஞ்சாவூர் அடுத்துள்ள அம்மன் பேட்டையில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கும் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், கால்நடை உதவி மருத்துவர்கள், அம்மன் பேட்டை கால்நடை ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.