By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தக்கலை அருகே வள்ளியாற்றில் தேங்கிய குப்பை கழிவுகளால் மாசுபட்ட குடிநீர் விநியோகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே வள்ளியாற்றில் தேங்கிய குப்பை கழிவுகளால் மாசுபட்ட குடிநீர் விநியோகம்
கனஂனியாகுமரி

தக்கலை அருகே வள்ளியாற்றில் தேங்கிய குப்பை கழிவுகளால் மாசுபட்ட குடிநீர் விநியோகம்

Last updated: October 7, 2025 6:57 pm
October 7, 2025
31 Views
Share
SHARE

தக்கலை, அக். 7 –

நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு வள்ளியாறு பகுதியில் இரணியல் அருகே குட்டித் தோட்டம் பகுதியில் 9 உறிஞ்சு கிணறுகள் (உறை கிணறுகள்) அமைக்கப்பட்டு அங்கிருந்து மேல்நிலை தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு அதன் பின் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நீர் ஆற்றில் உள்ள கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்படாமல் நேரிடையாகவே மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நீரையே ஊராட்சியை சேர்ந்த பல ஆயிரம் மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக இந்நீர் மாசுபாடு கொண்டதாக காணப்படுவதோடு கலங்கலாக உள்ளது. இதனால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் இப்பகுதி மக்கள் உள்ளாகும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். இருந்தும் இப்பகுதியில் வேறு எவ்வித நீர் ஆதாரமும் இல்லாததால் இதனையே நம்பி இருக்க வேண்டிய நிலையில் வேறு வழியின்றி மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலுக்கு முக்கிய காரணம் நீர் விநியோகம் செய்யப்படும் பகுதியில் வள்ளியாற்றில் ஆகாய தாமரைகள் உள்ளிட்ட அநேக தாவரங்கள் ஆறு தெரியாதபடி மூடி படர்ந்து உள்ளதோடு அதன் தழைகள் அவ்விடத்தை மாசுபடுத்தி வருகிறது. அத்தோடு ஆற்றில் வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை தேக்கி மேலும் பாதிப்புகளும் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.இங்குள்ள உறைகிணறுகள் ஆற்றுவெள்ளம் அதிகரித்தால் அதன் வெள்ளம் கிணறுகளை மூடிடும் அவலத்தினையே எதிர்நோக்கி உள்ளது.

மேலும் கிணறுகளில் இருந்து சீராக நீர் விநியோகம் செய்ய முடியாத நிலையும் உள்ளது. இங்குள்ள மின்மோட்டார்களுக்கு வரும் மின்கம்பிகள் மின்சார வாரியத்தினரால் சரிவர பராமரிப்புக்கு உள்ளாக்கப்படாததால் குடிநீர் விநியோகம் அடிக்கடி தடைபடுகிறது. இது மேலும் இப்பகுதி மக்களை குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிக்கு உள்ளாக்கி வருகிறது. எனவே இப்பகுதி மக்களுக்கு எவ்வித தொய்வின்றி நீர் விநியோகம் செய்யவும், நீர் மாசுபடுவதை தடுக்க வள்ளியாற்றில் குறிப்பிட்ட பகுதிகளில் தேங்கிய கழிவு குப்பைகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பூதப்பாண்டியில் ஆர்ப்பாட்டம்
ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளருக்கு வெட்டு
இரணியல் அருகே 1200 லிட்டர் படகுகளுக்கு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்
கேரளாவுக்கு பாறை பொடி கடத்திய டாரஸ்
ராமன்துறையில் விஜய்வசந்த் எம்பி பிறந்த தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஞானதாசபுரம் ஊரில் கோயில் கட்டி ஊர் பெயரை மாற்ற திட்டம் : எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு

December 8, 2025
28 Views
வேலூரில் சுதாகர் பல் மருத்துவமனை திறப்பு விழா
திங்கள் சந்தையில் போலி நகைகள் கொடுத்து பெண்ணிடம் ரூ 1 .75 லட்சம் மோசடி
உடனடியாக நடவடிக்கை வட்டார வளர்ச்சி அலுவலர்
குருமூர்த்தங்களின் திருப்பணியை தருமபுரம் ஆதீனகர்த்தர் தொடக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account